பிரித்தானியாவில் கட்டாயமாக்கப்பட்ட கொரோனா சோதனை: ஏன் தெரியுமா?

பிரித்தானியாவில் இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், குறிப்பிட்ட பகுதிகளில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாய கொரோனா சோதனை செய்ய வேண்டும் வலியுறுத்தப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் சமீப நாட்களாக குறைந்து வருகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அந்தந்த பகுதிகளில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

வரும் 22-ஆம் திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஊரடங்குகளை தளர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், இப்படி குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா அதிகரித்தால், மீண்டும் கட்டுப்பாடுகள் அப்படியே இருக்கலாம் என்பதால், இங்கிலாந்தின் Hampshire மற்றும் Surrey-வில் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

குறிப்பாக postcodes-களில் வசிக்கும், அதாவது Hart மாவட்டம், Rushmoor Borough மற்றும் Surrey எல்லையில், வசிக்கும் அல்லது பணிபுரியும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் புதன்கிழமை முதல் கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பதை பரிசோதிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சோதனைக்கு பின்னர், கொரோனா உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் உடனடியாக சுய-தனிமைப்படுத்தி கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது. குறித்த இந்த, மூன்று பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா அறிகுறிகள் உள்ள எவரும் பரிசோதனை இடத்திற்கு செல்வதற்கு முன்பு, ஆன்லைனிலோ அல்லது தொலைபேசியிலோ இலவச சோதனையை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா பரவல் பிரித்தானியாவின் எல்லா பகுதிகளிலும் குறைந்து காணப்படுகிறது. ஆனால், இங்கிலாந்தில் ஒரு 10 மருத்துவமனைகளில் இந்த பாதிப்பு இன்னும் குறையவில்லை. Bolton தான் இந்திய கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டு, நாட்டிலேயே அதிக தொற்று வீதத்தைக் கொண்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட, இப்போது 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி, இங்கிலாந்தில் 861 பேர் வைரஸால் மருத்துவமனையில் இருந்ததாக NHS இங்கிலாந்து தரவு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!