தமிழகத்திற்கு உதவிக்கரம் நீட்டிய லண்டன் சிறுவன்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் நிதி வழங்குகின்றனர். அதேபோல் சிறுவர்கள் பலரும் தங்கள் தேவைக்கு சேர்த்துவைத்த உண்டியல் பணத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்தனர்.

அந்த வகையில் வெளிநாட்டில் வசித்து வரும் தமிழக தம்பதியின் 8 வயது மகன் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கிருபாசங்கர், பிரின்சஸ் தம்பதி லண்டனில் பணிபுரிந்து வருகின்றனர்.

இத்தம்பதிக்கு புத்தன் என்ற 8 வயது மகன் உள்ளார். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக இருந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த புத்தன், தனது சேமிப்பு பணம் ரூ. 1 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வங்கி மூலம் வழங்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!