பிரான்சுக்கு வந்துள்ள புதிய சிக்கல்!

கவலையை ஏற்படுத்தியுள்ள புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மேற்கு பிரான்சில் கூடுதலாக பரிசோதனை மையங்களும் தடுப்பூசி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. நடந்தது என்ன? தென்மேற்கு பிரன்சிலுள்ள Bordeaux என்ற இடத்தில், சுமார் 50 பேர் கொண்ட ஒரு குழுவினருக்கு அபூர்வ வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

அதை, Bordeaux வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் என பிரான்ஸ் ஊடகங்கள் அழைகின்றன. ஆனால், அது முழுமையாக ஒரு புதுவகை கொரோனா வைரஸ் அல்ல என்கிறார் பேராசிரியர் Patrick Dehail என்ற அறிவியலாளர். பிரித்தானிய வகை திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் இன்னொரு மாற்றம் பெற்ற வைரஸ்தான் இது என்கிறார் அவர்.

கவலையை ஏற்படுத்தும் ஒரு வைரஸாக இது பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளான யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அவர்களது நிலை மோசமாகவில்லை. அந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படாது என்பதற்கும் ஆதாரமும் இல்லை.

பிரான்சில் இரண்டாம் கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், Bordeaux மேயரான Pierre Hurmic, மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறக்கவேண்டாம் என எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!