இலங்கையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 29 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் 2,325 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!