இராணுவத்திடம் இருந்து பறிக்கும் நேரம் வந்து விட்டது!

இராணுவத்தின் வசமுள்ள கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத் துறையிடம் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இராணுவத்திடம் இருந்து கொவிட் தொற்று ஒழிக்கும் பணிகளை பறிக்க வேண்டும் . சுகாதாரத் துறைக்கு சம்பந்தப்படாத அதிகாரிகளின் சேவைகள் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ளப்படுகின்றன. எனினும் இப்போதாவது அமைச்சரவை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து உடனடி தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

கொவிட் ஒழிப்பு விவகாரத்தில் இராணுவத்தளபதி, இராணுவ அதிகாரிகள் முதலாம், இரண்டாம் கொரோனா அலைகளை கட்டுப்படுத்த சிறப்பான சேவைகளை மேற்கொண்டிருந்தனர். அப்போதும் இராணுவத் தளபதிக்கு எதிராக பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர். இருப்பினும் தற்போது மூன்றாவது அலை ஏற்பட்ட விதம் மற்றும் மேற்குலக நாடுகளின் மருத்துவர்களும் உள்நாட்டு மருத்துவர்களும் வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் மற்றும் உள்நாட்டு தேசிய மருந்துகள் குறித்து வெளியாகின்ற கருத்துக்களைப் பார்க்கின்றபோது இப்போது இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் உதவியுடன் தீர்மானம் எடுக்கின்ற அதிகாரத்தை சுகாதாரத் துறையினருக்கே வழங்க வேண்டும்.

அதற்கான நேரம் வந்துவிட்டது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!