மிக வேகமாக பரவும் புதிய வகை கொரோனா: அச்சத்தில் பிரான்ஸ்!

பிரான்சின் பல பகுதிகளில், மிக வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அங்கு இன்னும் முழுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், தற்போது நாட்டில் மிகவும் வேகமாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வைரஸ் போர்தோவில் 64 பேரிற்கு உறுதி செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

அதே சமயம், தற்போது இது போர்தோ உருமாறிய வைரஸ் என கூறப்படுகிறது. இது இந்திய வைரஸ் மற்றும் பிரித்தானிய வைரசின் ஒன்றிணைந்த உருமாறிய வைரஸாக உள்ளதாகவும், இன்னமும் யாரும் இதனால் தீவிரசிகிச்சைப் பிரிவிற்குச் செல்லவில்லை எனவும் பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் கொரேனாத் தடுப்பு ஊசிக்கு கட்டுப்படுமா அல்லது அதனை மீறுமா என்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!