தீப்பற்றி எரியும் கப்பலால் அமில மழை பொழியும் ஆபத்து!

கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்படலாம் என்றும், இதனால் கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கப்பலில் உள்ள இரசாயனங்கள் காரணமாக நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கப்பலுக்குள் 25 தொன் நைட்ரிக் அசிட் உள்ளதாகவும், கப்பலில் 74,000 தொன் எடை கொண்ட 1,487 கொள்கலன்கள் உள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கடலில் விழும் பொருட்களை மக்கள் தொடுவதனை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன் ஆபத்துக்கள் குறித்து இன்னமும் ஆராயப்படுகின்ற நிலையில் மக்கள் இதனை கையில் எடுப்பதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!