ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் உட்பட 93 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறுகுற்றங்களுடன் தொடர்புடைய மேலும் 77 சிறைக்ககைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் இன்று பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!