மரணதண்டனைக் கைதிகள் உண்ணாவிரதம்!

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.நேற்று முதல் போசனத்தை எடுத்துக்கொள்ளாது உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் குதித்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரான சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து தங்களுக்கான தண்டனையை வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றுமாறு மரண தண்டனை கைதிகள் கோரியுள்ளனர்.

இந்நிலையில் இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் சிறைச்சாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!