தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றுக்கு ஒருவர் பலி!

கொரொனா வைரஸ் தொற்று தமிழகத்தில் குறைந்து வரும் நேரத்தில், ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளும் தளர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மற்றும் மதுரையை சேர்ந்த இருவருக்கு அந்த தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும், சென்னை கோட்டூரை சேர்ந்த நர்சுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் குணமடைந்துள்ளார். அதேபோல காஞ்சிபுரத்தை சேர்ந்தவரும் குணமடைந்துள்ளார். ஆனால், மதுரையை சேர்ந்தவர் தான் சிகிச்சை பலினின்றி உயிரிழந்து உள்ளார்.

அதன்பின் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரு மரபணு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதியானது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாதம்தோறும் டெல்டா பிளஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான பரிசோதனை மையங்கள் நாடு முழுதும் 14 இடங்களில் மட்டுமே உள்ளன. அவையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளன.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரசால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!