வடக்கு ஆடைத்தொழிற்சாலைகளில் தடுப்பூசி போடவில்லை!

வடக்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு சுகாதாரப் பிரிவினருக்கு ஊடாக தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லையென வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு வியாழக்கிழமை தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. கிளிநொச்சியில் தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 25 பேருக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்குத் தடுப்பூசிகள் எம்மூடாக ஏற்றப்படவில்லை. அவை நேரடியாக இராணுவத்தினர் ஊடாக ஏற்றப்படதாக அறிகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!