பிரான்சில் குளித்துக்கொண்டிருந்த பெண் செய்த செயல்: அதிரடியாக கைது செய்த போலீசார்!

பிரான்சில், கோடை காலங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுக்களில் குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் Dijon (Côte-d’Or) நகரில் கடந்த வியாழக்கிழ்மை பகல் 2 மணி அளவில் Place de la République (Dijon) பகுதியில் உள்ள நீரூற்று ஒன்றில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில். அவரை நெருங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் அங்கிருந்து வெளியேறும் படி கூறியுள்ளனர்.. ஆனால், அதற்கிடையில் அப்பெண், பை நிறைய யூரோ தாள்களை வைத்துக்கொண்டு, அதை தூக்கி வீசிக்கொண்டும் இருந்துள்ளார்.

10, 20 மற்றும் 50 யூரோ தாள்கள் என பல யூரோ தாள்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்துள்ளன. இதையடுத்து உடனடியாக குறித்த பெண்ணை கைது செய்த பொலிசார், அத்தோடு பணத்தாள்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன.

மொத்தமாக 50.000 யூரோக்கள் அவரிடம் இருந்ததாகவும், ஆனால் 47.200 யூரோக்கள் மாத்திரமே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி தாள்கள் குறித்த நீரூற்றின் வடிகால் பகுதிக்குள் நுழைந்து அடைத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!