தமிழ் மக்களுக்காக சிறையில் மாதக்கணக்கில் விரதம் இருந்தேன்: சசிகலா!

சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் தொலைபேசியில் உரையாடி வருகிறார். அந்தவகையில் தேனியை சேர்ந்த கர்ணன் என்ற தொண்டரிடம் சசிகலா நேற்று பேசினார். அதன் விவரம் வருமாறு: கட்சி இப்படி வீணாகிட்டு இருக்குறதை இனியும் என்னால் பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியாது. ரொம்ப மோசமான நிலைமைக்கு கட்சி போயிட்டு இருக்கு. அதை சரி பண்ணி கொண்டுவரணும்.

நான் இருக்கும் காலம் தொட்டு அதை நிச்சயம் செய்வேன். சொன்னபடி அவங்க ஜெயிச்சு காட்டுவாங்கன்னுதான் நான் ஒதுங்கியிருந்தேன். ஜெயிச்சியிருந்தா கூட அம்மா ஆட்சி 3-வது முறையாக வந்திடுச்சுனு சந்தோஷத்துலேயே நானும் இருந்துருப்பேன். அதை செய்யலையே. இப்போது என்கூட பேசுற தொண்டர்களையும் கட்சியை விட்டு நீக்கிட்டு இருக்காங்க.

எனக்கு 4 வருட சிறைத்தண்டனை அப்படினு தீர்ப்பு வந்ததுமே, அடுத்த 10 நிமிஷத்துல அடுத்தக்கட்ட வேலையை ஆரம்பிச்சுட்டேன். உடனடியாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி, உடனடி முடிவு எடுத்து ஆட்சியை நல்லபடியா அமைச்சு கொடுத்துட்டுதானே போனேன். நான் பெங்களூருவில் இருந்தாலும் 4 வருஷமா என் உடல்தான் அங்கே இருந்ததே தவிர என் உயிர் தமிழக மக்களை சுற்றியே இருந்துச்சு.

நான் பிறந்ததில் இருந்து வெளிமாநிலங்களில் தங்கியதே இல்ல. இதுதான் எனக்கு முதல் அனுபவம். நான் சிறையில் இருந்தாகூட, தமிழக மக்கள் கொரோனாவால பாதிக்கப்பட கூடாதேனு நான் செய்யாத பூஜை கிடையாது. மாதக்கணக்கில் விரதமும் இருந்தேன்.

இவ்வாறு சசிகலா பேசியுள்ளார்.

இதேபோல மதுரவாயலை சேர்ந்த சண்முகராஜ், திருவாரூரை சேர்ந்த பொன்னி கைலாசம், மதுரையை சேர்ந்த ஸ்டாலின் ராஜா, சென்னையை சேர்ந்த செல்வி ஆகியோரிடமும் சசிகலா தொலைபேசியில் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!