பாண் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு?

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் வாரம் முதல் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

செரன்டிப் நிறுவனம் கடந்த வாரம் முதல் கோதுமை மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 தொடக்கம் 10 ரூபா வரை அதகிரிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, தற்போது பாணின் விலையையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!