15 வயது சிறுமி இணையம் வழியாக விற்கப்பட்ட விவகாரம் – கப்பலொன்றின் கெப்டன் உள்ளிட்ட 26 பேர் இதுவரை கைது

கொழும்பு – கல்கிஸ்ஸையில், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் கப்பல் ஒன்றின் கெப்டனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 26 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தாயும், மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தலைவரும் உள்ளனர்.

மேலும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஓட்டுநர், ஒரு கார் ஓட்டுநர் மற்றும் சிறுமியை பாலியல் ரீதியாக விற்க பயன்படும் வலைத்தளத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டவர் ஆகியோரும் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 15 வயது சிறுமி இணையம் வழியாக பாலியல் தொடர்பாக பல வாடிக்கையாளர்களுக்கு 10,000 ரூபா. 15,000 மற்றும் 30,000 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் பிரதான சந்தேகநபர் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கல்கிசையில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இவர் இந்த சிறுமியை தெல்கொடயில் வசிக்கும் அவரின் தாயிடமிருந்து இருந்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!