வரலாறு காணாத வெப்பத்தால் முற்றாக அழிந்த கிராமம்!

கனடாவில் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீயால் முற்றாக அழிந்துள்ள Lytton கிராமமானது மறு சீரமைப்பு செய்யப்படும் என மாகாண அரசு உறுதி அளித்துள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் வெப்பம் காரணமாக இதுவரை 486 பேர் மரணமடைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீயால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Lytton கிராமத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Lytton மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள சுமார் 1,000 மக்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றியுள்ளனர்.

காட்டுத்தீயால் சேதமடைந்துள்ள பகுதிகளை விசாரணை உட்படுத்தப்படும் எனவும், உரிய முறையில் மறு சீரமைப்பு செய்யப்படும் எனவும் மாகாண முதல்வர் John Horgan அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!