இலங்கை எதிர்காலத்தில் வறுமையை எதிர்நோக்க கூடும்

இலங்கை எதிர்காலத்தில் வறுமையை எதிர்நோக்க கூடும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் இதற்கு காரணமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரத்தட்டுப்பாட்டினால் விவசாய உற்பத்தி குறைவடைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும் எனவும், உணவினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு பணம் இல்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!