நாடாளுமன்றம் வரும் பசில்! – மூன்றாக பிளவு பட்டது மைத்திரி தரப்பு

ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச விரைவில் நாடாளுமன்றம் வரவுள்ளதாகவும், முக்கிய அமைச்சு பதிவியொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அண்மை நாட்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆளும் கட்சியின் பிரதான பங்காளி கட்சிகளில் ஒன்றாக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில், பசில் ராஜபக்சவின் வருகை தொடர்பில் மூன்று விதமான தரப்பினர்கள் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசிலின் வருகையை விரும்பும் தரப்பினர்கள்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கருத்து மோதல் நிலவுவதாகவும், பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற பயணத்திற்கு ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

இந்த குழுவில் அமைச்சர் மஹிந்த அமரவீர, கட்சியின் மூத்த துணைத் தலைவரான இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, தேசிய அமைப்பாளரான இராஜாங்க அமைச்சர் லசந்தா அலகியவண்ண ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிலுக்கு எதிரான அணி…….

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஆகியோர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருவது நாட்டுக்கு பயனளிக்காது என்று பகிரங்கமாக கூறியுள்ளனர்.

பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட இருவரில் ஒருவராவார்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டுவதற்கான திட்டத்தை உருவாக்கியவர் பசில் ராஜபக்ச என்று பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

பசில் தொடர்பில் அமையாக இருக்கும் தரப்பு…..

கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் மூத்த துணைத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டவர்கள் இந்த தரப்பில் அடங்குகின்றனர்.

இந்த தரப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால், பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிக மூத்த இரண்டு உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேன மற்றும் நிமல் சிறிபாலா டி சில்வா ஆகியோர் இத்தகைய கடுமையான மௌனத்தைக் கடைப்பிடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!