பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை?

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் என குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தபடும் கோதுமை மா, சீனி, முட்டை மற்றும் மாஜரின் ஆகியவற்றின் விலைகள் தற்போது அதிகரித்த நிலையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் நஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளபோதிலும், அது குறித்து எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பேக்கரி உற்பத்தி பொருற்களின் விலைகள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கப்படலாம் என குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!