யாழ்ப்பாணம் பழைய கச்சேரி சீனாவுக்கா?

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்தின் விசேட அதிகாரி கீதனாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதன் ஓர் அங்கமாகவே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்தின் விசேட அதிகாரி கீதனாத் காசிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டாதாகவும் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று அதிகாரிகளால் தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!