லண்டனை உலுக்கிய இரட்டைக்கொலை: வெளியான குற்றவாளியின் புகைப்படம்!

லண்டனின் பூங்காவில் இரண்டு சகோதரியால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 19 வயது இளைஞன் குற்றவாளி என்பது நிரூபணமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் 6-ஆம் திகதி லண்டனில் இருக்கும் Wembley பூங்காவில் Bibaa Henry(46) மற்றும் Nicole Smallman(27) என்ற இரண்டு சகோதரிகள் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையில், 19 வயது மதிக்கத்தக்க Danyal Hussein என்பவரை பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று Old Bailey நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குறித்த இளைஞன் இரண்டு பேரையும் தாக்கி கொலை செய்தது தெரியவந்தால், அவர் குற்றவாளி என்பது நிரூபானது. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Bibaa Henry-வின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சம்பவ தினத்தன்று சகோதரி Nicole Smallman மற்றும் நண்பர்கள் சிலர் பூங்காவிற்கு சென்றுள்ளனர்.

பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியாக இவர்கள் கொண்டாடிய நிலையில், மறுநாள் காலையில், கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இவர்கள் கொலை செய்யப்படுவதற்கு நான்கு மணி நேரங்களுக்கு முன்பு Danyal Hussein கத்தியைக் கொண்ட ஒரு கத்தியுடன் வருவதை சிசிடிவி கமெராவில் பார்க்க முடிந்தது.

அதன் பின், அவர் சகோதரிகள் இரண்டு பேரையும் கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளான். இதில், Bibaa Henry 8 முறை கத்தியால் குத்தப்பட்டு கிடந்துள்ளார். அவரிடம் இருந்து உயிர் பிழைக்க போராடிய Nicole Smallman 28 முறை கத்தியால் குத்தப்பட்டார். பூங்காவை விட்டு வெளியேறும் மற்றும் நுழைவாயில்களில் இருந்து டி.என்.ஏ மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் Danyal Hussein தான் இந்த சம்வத்திற்கு தொடர்புடையவன் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்தனர்.

அதுமட்டுமின்றி சம்பவம் நடைபெற்ற மறுநாள் குறித்த இளைஞன், கைகளில் கத்தி குத்தால், காயங்களுக்குள்ளானதை மற்றொரு சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடிக்க முடிந்தது.

மேலும், கொலைக்கு நடப்பதற்கு முன்னர் Danyal Hussein கொலைக்கு பயன்படுத்திய கத்திகள் வாங்குவதும், சம்பவத்திற்குப் பிறகு பூங்காவிற்கு அருகிலுள்ள தனது தந்தையின் வீட்டிற்கு திரும்பிச் செல்வதும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவன் தொடர்பான கையால் எழுதப்பட்ட கடித குறிப்பு ஒன்று பொலிசாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில், Danyal Hussein குற்றவாளி என்பது நிரூபனமானது. இருப்பினும் அவரது மனநிலை குறித்த அறிக்கை தொடர்பான விசாரணை நிலைவையில் உள்ளது,

இது வரும் செப்டம்பர் மாதம் 22-ஆம் திகதி நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட Danyal Hussein Blackheath-ன் Barnett Grove பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!