நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்: பயணிகள் நிலை என்ன?

ரஷ்யாவின் பார் ஈஸ்ட் பிராந்தியத்தில் 29 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பலனா நகருக்கு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. விமான சிப்பந்திகள் 6 பேருடன் 29 பேர் விமானத்தில் பயணம் செய்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் கடலில் விழுந்து இருக்கக்கூடும் எனவும் சில உள்ளூர் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாயமான விமானத்தை தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுள்ளன. விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், அதில் பயணம் செய்த 29 பேரின் நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!