பதவி விலக தயாராக இருக்கின்றேன் – தயாசிறி ஜயசேகர

தாம் பதவி விலக தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற அணியிடம் கூறியதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடியதுடன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே தயாசிறி ஜயசேகர இதனை கூறியுள்ளார்.

கட்சி தீர்மானித்தால், கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்தால், கட்சியின் தலைவர், பதவி விலகுமாறு கூறினால் நான் விலக தயாராக இருக்கின்றேன்.

எனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை. இப்படி தொடர்ந்தும் பதவியில் இருக்கும் எதிர்பார்ப்பு இல்லை.

நாளை காலை பதவி விலகுமாறு கூறினால், நான் பதவி விலகி சும்மா இருப்பேன் எனவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!