போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்! நாமல்

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த கேள்வி பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!