பயணக்கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு நடவடிக்கை

பயணக்கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கிடையில் காணப்படும் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பயணக்கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கிடையில் காணப்படும் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, விகாரைகள், பள்ளிவாசல்கள், மற்றும் கோவில்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, ஆடைத்தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவைக்கேற்ற, மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன், திறக்கமுடியும் என்பதோடு, பொறுப்பினை நிறுவன உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்.

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, மண்டபத்தின் கொள்ளளவில் 25 வீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்படுதல் அவசியமாகும் என்பதோடு, 150 பேர் மாத்திரமே அதிகபட்சமாக பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவன கூட்டங்களுக்கு நூற்றுக்கு 25 வீதமானவர்களுடன் மாத்திரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிக்கும் வகையில் வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயிறச்சி பட்டறைகள் மற்றும் கூட்டங்களுக்கு அதிக பட்சமாக 50 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையானது மேல் மாகாணத்தில் ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானோருக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய மாகாணங்களில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வங்கி மற்றும் அடகு சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு ஒரே நேரத்தில் 10 பேருக்கு மாத்திரம் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

மொத்த விற்பனைகளுக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கப்படவுள்ளதோடு, நடமாடும் வர்தகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்;டுள்ளது.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வீதியோர அங்காடிகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சில்லறை விற்பனை நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு 25 வீதமான வாடிக்கையாளர்களை மாத்திரம் அனுமதிக்கும் வகையில் சிறப்பு சந்தையைதிறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வெதுப்பகங்களை திறப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக கட்டிட தொகுதிகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, மக்கள் ஒன்று கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் திருத்தும்; இடங்கள் திறக்கப்படும் என்பதோடு, தையலாளர்கள், உடை அலங்காரவியலாளர்கள், தொடர்பாடல் பிரிவினர், புகைப்படங்கள் எடுக்குமிடங்கள், ஆடையகங்கள் ஆகியனவற்றை திறப்பதற்கு அனுமுதி வழங்கப்பட்டுள்ளது.

ஆடை சலவை நிறுவனங்கள், பலகை தொழில் நிறுவனங்கள், கட்டுமான தொழில் நிறுவனங்கள், சிகை அலங்கார நிலையங்கள், மற்றும் அழகு கலை நிலையங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சீருடைகளை விற்பனை செய்யும் நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழஙகப்பட்டுள்ளது.

வயோதிபர்கள் இல்லம் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியனவற்றிற்கு செல்வதற்கு உறவினர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண நீதிமன்றங்களுக்கு 30 வீதமானவர்களுக்கும் ஏனைய மாகாண நீதிமன்றங்களுக்கு 50 வீதமானவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நூலகங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட பயிற்சிகள் மற்றும் இடைவெளி பேணக்கூடிய விiளாட்டுக்களுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டுள்ளதோடு, சமூக இடைவெளிகளுடன் நடைப்பயிற்சிக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மரணச்சடங்குகளில் 50 பேர் மாத்திரம் பங்கேற்க முடியும் என்பதோடு, 24 மணித்தியாலங்களில் இறுதி சடங்கினை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குள் மற்றும் தொல்பொருள் காட்சியகம் ஆகியன அரங்கின் கொள்ளளவில் 50 வீதமானோருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

டெஸ்டூரண்ட் நிலையங்களை திறக்கவும் முன்பதிவின் வாயிலாக உணவுகளை எடுத்துச்செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதோடு, சுகாதார விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பா நிலையங்கள் மற்றும் உணவகங்கள், மற்றும் விடுதிகளை சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கெசினோ சுதாட்ட விடுதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, இரவு நேர களியாட்ட விடுதி மற்றும் சுதாட்ட நிலையங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீச்சல் தடாக நிலைங்களை திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!