ஏகாதிபத்தியம் மேலோங்கும் போது மக்கள் தோற்கடிப்பார்கள்!

ஏகாதிபத்தியம் மேலோங்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அதனை மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள் என்பதே வரலாறு எமக்குச் சொல்லும் பாடமாகும் என்று முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய, எச்சரித்திருக்கின்றார்.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு தொடர்பில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை அரசாங்கம் மிகவும் மோசமான வகையில் மீறுகின்றது.

அரசாங்கமானது தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதற்குப் பதிலாக, அதுகுறித்து மக்கள் பேசுவதைத் தடுப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றது.

ஏகாதிபத்தியம் மேலோங்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அதனை மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள் என்பதே வரலாறு எமக்குச் சொல்லும் பாடமாகும்.

அரசாங்கம் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகக் கூறியபோது, அவர்கள் பௌத்த பிக்குகளை நிலத்திலிருந்து இழுத்துச்செல்வார்கள் என்று யாரும் நினைக்கவில்லை.

வயது முதிர்ந்தவர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் மிகவும் மோசமான விதத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தின் மிகவும் மோசமான மறுபக்கம் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியிருக்கின்றது என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!