தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக பதவியேற்ற லியோனி!

தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக நல்ல நேரம் பார்த்து லியோனி பதவியேற்றார். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பட்டிமன்ற பேச்சாளர் லியோனியை பாடநுால் கழக தலைவராக முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் குறித்து லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவரது நியமனத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பாடநுால் கழக தலைவராக லியோனி நேற்று பதவியேற்றார். நேற்று காலை 11:00 மணிக்கு பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. திடீரென காலை 9:30 மணிக்கே வந்து பதவியேற்றார். இதுகுறித்து விசாரித்த போது நேற்று காலை 10:30 முதல் 12:00 மணி வரை எமகண்டம்.

அதனால் 11:00 மணிக்கு பதவியேற்காமல் காலை 9:15 மணி முதல் 10:15 வரை நல்லநேரம் என்பதால்அந்த நேரத்தில் பதவியேற்றதாக கூறப்பட்டது.கருணாநிதி பெயர்பதவியேற்ற பின் லியோனி அளித்த பேட்டி: தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவது முதல்வரின் மிகப்பெரிய தொலைநோக்கு பார்வை.

அதற்கு உதவும் வகையில் செயல்படுவேன். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த தகவல்கள் இடம்பெற முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!