கடன் கொடுத்த மூதாட்டியை கொன்று துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசிய தம்பதி!

டெல்லியில் வயதான மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலை தொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

உடலை வெட்டி சாக்கடைக் கால்வாயில் போட்டுவிட்டதாகவும், இதற்காக இரவு முழுவதும் மூதாட்டியின் வீட்டிலேயே இருந்து ரத்தக்கறையை அழித்ததாகவும் போலீசில் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அவர்கள் இருவரும் பிளாஸ்டிக் பைகளில் எதையோ எடுத்துச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

கவிதா எனும் 72 வயது மூதாட்டி, பக்கத்து வீட்டில் வசித்த அனில் ஆர்யா-தன்னு ஆர்யா தம்பதியினருக்கு 1.5 லட்ச ரூபாயை கடனாகக் கொடுத்துள்ளார். இதை சென்ற மாதம் 30ஆம் தேதி இரவு திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து, தனியாக இருந்த கவிதாவை பலமாகத் தாக்கிக் கொலை செய்திருக்கிறார்கள்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மூத்த காவல்துறை அதிகாரி சந்தோஷ் குமார் மீனா கூறுகையில், ‘மூதாட்டியின் உடலை மூன்று துண்டாக வெட்டி, அங்கிருந்த சாக்கடைக் கால்வாயில் கொண்டு போட்டுள்ளார்கள். சாக்கடையில் தூக்கி போடுவதற்கு முன்னரே சடலத்தில் இருந்த நகைகளை எடுத்துள்ளனர். அந்த நகையை ஒரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 70000 ரூபாய் பெற்றுள்ளனர்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!