இலங்கைக்கு ஏற்பட போகும் பேராபத்து! விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

இலங்கை தற்போது 430 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான கடன்களை மீளச்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது.

இவ்வாறானதொரு நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, எதிர்வரும் 2 – 3 வருடகாலத்திற்கு அவசியமான நிதியுதவிகளை அதனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதியுதவி கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் நிதியுதவியை பெற முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!