முடக்கப்பட்டது பருத்தித்துறை நகரம்!

பருத்தித்துறை நகரப் பகுதி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நேற்று முடக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதிகளில் நேற்று 35 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதை அடுத்து, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மருந்தகங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்றும்,வங்கிகள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் திறக்க முடியும் என்றும் சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரில் இருந்த பேருந்து தரிப்பிடம் மூடப்பட்டுள்ளதால் டிப்போ சந்தியிலிருந்து பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் மூவருக்கு தொற்று உள்ளமை நேற்று அன்டிஜன் பரிசோதனையில் தெரியவந்தது. அதனையடுத்து சந்தை முடக்கப்பட்டது. பருத்தித்துறை பெருநகர், 401 கிராம அலுவலகர் பகுதிகளில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெரு, தும்பளை வீதி, பத்திரகாளி வீதி, வீ எம் வீதி, கடற்கரை வீதி, கொட்டடி வீதி அனைத்திலிருந்து நகருக்குள் உள் நுழைய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!