கெஹெலிய ரம்புக்வெலவின் கருத்துக்கள் தொடர்பில் எதிர்கட்சி கவலை

ஆசிரியர்கள் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது …

உண்மையில் எங்களுக்கென்றால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு தினமாவது பாடசாலை கல்வியை அவர் கற்றிருப்பாராயின், அல்லது ஆசிரியரிடம் அவர் கற்றிருப்பாராயின் ஆசியரியர்கள் தொடர்பில் இவ்வாறு ஒரு கருத்தினை முன்வைக்க முடியாது. எங்களுடைய ஆட்சியின் போது ஆசிரியர்கள் ஆர்பாட்டங்களை மேற்கொள்கின்ற சந்தரப்ப்த்தில் இவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் குரல் எழுப்பினர். அதே போன்று வைத்தியர்கள் போராட்டங்களை முன்னெடுத்த போதும் இவர்கள் அவர்களுக்கு மதிப்பளித்து குரல் கொடுத்தனர். ஆனால் இன்று ஆசிரியர்கள் தொடர்பில் பொறுப்பின்றி செயற்படுகின்றனர். அவரின் கருத்துக்கள் குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம். இந்த விடயத்தினை எதிர்வரும் நாடளுமன்ற அமர்வுகளிலும் கலந்துரையாடவுள்ளேம் என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!