உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் இன்று

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம், இன்று இடம்பெறவுள்ளது.

நாட்டில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால், அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கெதிராக குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய நாடாளுமன்ற விவாதத்தை தொடர்ந்து நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதன்படி இன்று மாலை 5 மணிக்கு நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் இன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!