“நியூயோர்க் டைம்ஸ்” பத்­தி­ரிகைக்கு எவ்­வாறு தகவல் கிடைத்­தது? – நாமல்

நியூயோர்க் டைம்ஸ்” பத்­தி­ரி­கையில் வெளி­யான தக­வ­லைத்தான் அர­சாங்­கமும் தெரி­வித்து வரு­கி­றது. எனவே அர­சாங்­கத்­திற்கும் குறித்த பத்­தி­ரி­கைக்­கு­மி­டை­யி­லான தொடர்பு என்ன? அப்­பத்­தி­ரி­கைக்கு அத்­த­கவல் எவ்­வாறு சென்­றது என்­பது குறித்து அர­சாங்கம் விசா­ரணை நடத்த வேண்டும் என கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக் கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ வேண்­டிக்­கொண்­டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று மாலை பத்­த­ர­முல்லை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

“நியூயோர்க் டைம்ஸ்” பத்­தி­ரி­கையில் வெளி­யான செய்தி கடந்த சில தினங்­க­ளாக பேசப்­பட்டு வரு­கி­றது. மத்­திய வங்கி பிணை­முறி மோசடி உள்­ளிட்ட விட­யங்­களை மூடி மறைப்­ப­தற்கு அர­சா­ங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கையின் ஓர் அங்­க­மா­கவே குறித்த செய்­தியை நோக்க வேண்­டி­யுள்­ளது.

மேலும் அப்­பத்­தி­ரி­கையில் வெளி­வரும் செய்­தி­களின் உண்மைத் தன்மை குறித்து பிரச்­சினை உள்­ளது. கடந்த காலங்­களில் அப்­பத்­தி­ரி­கையில் வெளி­யான தக­வல்கள் பிழை­யா­னவை என்­பதை அப்­பத்­தி­ரி­கையே பின்னர் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. மேலும் சிலரின் அர­சியல் தேவை­க­ளுக்­காக குறித்த பத்­தி­ரிகை தகவல் வெளி­யி­டு­வ­தா­கவும் உல­க­ளா­விய ரீதியில் அபிப்­பி­ராயம் உள்­ளது.

எனவே ஜனா­தி­பதித் தேர்தல் காலத் தில் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு சீனா­வி­ட­மி­ருந்து அவ்­வாறு நிதி கிடைக்­க­வில்லை என்­பதை பொறுப்­புடன் கூறி­க்கொள்­கிறேன். மேலும் அந்தப் பத்­தி­ரிகை அறிக்­கையில் அந்­நி­திக்­கான காசோலை அலரி மாளி­கையில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை அர்ஜுன் அலோ­சி­ய­ஸி­ட­மி­ருந்து சிலர் காசோலை பெற்று அதனை பண­மா­கவும் மாற்­றி­யுள்­ளனர். அது குறித்து முறை­யி­டாத சில அர­சி­யல்­வா­திகள் அலரி மாளி­கையின் நுழை­வாயில் காவ­லர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­தாகக் குறிப்­பிடும் காசோலை தொடர்பில் நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவில் முறை­யிட்­டுள்­ளனர்.

மேலும் ஜனா­தி­பதித் தேர்­தலின் பின் னர் ராய்ட்டர் செய்திச் சேவை­யிலும் இவ்­வா­றா­ன­தொரு தகவல் வெளி­யா­கி­யி­ருந்­தது. அதன் பின்னர் அர­சாங்கம் துறை­முக நகரத் திட்­டத்தை நிறுத்­தி­ய­துடன் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் இரண்டாம் கட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளையும் நிறுத்­தி­விட்டு குறித்த நிறு­வனம் தொடர்பில் விசா­ரணைகளை மேற்­கொண்­டது. பின்னர் ஒன்­றரை வரு­டங்­களின் பின்னர் மீண்டும் துறை­முக வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் அந்­நி­று­வ­னத்­திற்கு அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது.

எனவே அர­சாங்கம் எதிர்­பார்த்து மேற்­கொள்ளும் விசா­ர­ணை­களில் தாம் எதிர்­பார்க்கும் இலக்கை அடை­ய­மு­டி­யா­தவி­டத்து அதனை ஊட­கங்­க­ளுக்கு வழங்கி சேறு பூசு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கி­றது. எனவே குறித்த விசா­ரணை அறிக்கை எவ்­வாறு “நியூயோர்க் டைம்ஸ்” பத்­தி­ரி­கைக்கு வெளி­யி­டப்­பட்­டது?

மேலும் “நியூயோர்க் டைம்ஸ்” பத்­தி­ரி­கையில் வெளி­யான தக­வ­லைத்தான் அர­சாங்­கமும் தெரி­வித்து வரு­கி­றது. எனவே அர­சாங்­கத்­திற்கும் குறித்த பத்­தி­ரி­கைக்­கு­மி­டை­யி­லான தொடர்பு என்ன? அத்­துடன் அப்­பத்­தி­ரி­கைக்கு குறித்த தகவல் எவ்­வாறு சென்­றது என்­பது குறித்து அர­சாங்கம் விசா­ரணை நடத்த வேண்டும். மேலும் அப்­பத்­திரி­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள உண்­மைக்குப் புறம்­பான தகவல் தொடர்பில் சட்ட நடவ­டிக்கை எடுப்­ப­தற்கு சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் ஆலோ­சனை நடத்­தி­யுள்ளோம்.

மேலும் யுத்­தத்தை நிறை­வு­செய்­வ­த ற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய மற்றும் அதி­க­ளவில் முத­லீ­டு­களை மேற்­கொண்ட சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடு­க­ளுக்கு எதி­ராக நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­டு­கி­றது. இது சர்­வ­தேசப் பிரச்­சி­னை­யாகும். ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்கு சீனா நிதியுதவி வழங்கியதாக குறிப்படுகின்றமை சீன அரசாங்கத்துடனான பிரச்சினையாகும்.

மேலும் சீனா, ரஷ்யா போன்ற நாடு கள் எமது நாட்டின் நட்பு நாடுகளாகும். அந்த நாடுகளுக்கு எதிராகவே நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. ஆகவே மேற்கத்தேய நாடுகளுக்கும் கீழைத்தேய நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரப் போரில் அரசாங்கம் சிக்கிக்கொள்ளாது நாட்டுக்குத் தேவை யானதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!