என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை வழங்குங்கள்: – தந்தை ஆவேசம்

மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக, என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தூ க்கு தண்டனை வழங்குங்கள் என குற்றவாளியின் தந்தை கூறியுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஜூன் 26-ம் தேதி பள்ளி சென்ற 8 வயது சிறுமி, தந்து தந்தையின் வருகைக்காக பள்ளியின் வெளியே காத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த, இரு காமுகர்கள் சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு, உண்மையை வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக கழுத்தையும் அறுத்து, லட்சுமண் தார்வாஜா பகுதியில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் வீசி சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், பயத்தில் உறைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ளும்பொழுது, பேருந்து ஒன்றிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர், டெல்லியை உலுக்கிய நிர்பயா வழக்கு போன்றே சிறுமியும் சிதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து சமூக ஆர்வாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் குற்றவாளிக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் விரைந்த செயல்பட்ட காவல்துறையினர் குற்றவாளிகள், இர்பான் மற்றும் அவரது நண்பர் ஆசிப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், எனது மகன் குடிகாரன். அவன் ஒரு அப்பாவி என்று நான் நினைக்கவில்லை. அவன் மீது தவறு உறுதி செய்யப்பட்டால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என குற்றவாளியின் தந்தை ஆவேசமாக கூறியுள்ளார். முன்னதாக சிறுமியின் தந்தை, தனக்கு இழப்பீடு எதுவும் வேண்டாம் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கினால் போதும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!