கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின

நாட்டின் பல பாகங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

பொரளை கின்ஸி வீதி, நொரிஸ் கெனல் வீதி ,கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி ஆகிய பகுதிகள் வெள்ளநீரில் முழழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் கடும்வாக ன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதேவேளை மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!