அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட ஏற்பாடு நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வாரம் நிறைவேற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்ட ஏற்பாடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் குறித்த அரிசி வகைகளுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும் என, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் 80 வீதமான மக்கள் பயன்படுத்தும் நாடு அரிசியின் விலையை 100 ரூபாவை விட குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரிசி விலை தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக, எதிர்வரும் வாரத்தில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!