கொரோனாவுக்கு மத்தியில் அவுஸ்திரேலியாவில் மேலும் ஒரு புதிய சிக்கல்: பெரும் அச்சத்தில் மக்கள்!

கடந்த சில வாரங்களாக அவுஸ்திரேலியாவின் கிழக்கு விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் பரவலாக தவளைகள் செத்து மடியும் சம்பவம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் குறைந்தது 242 பூர்வீக தவளை இனங்கள் உள்ளன, 35 அழிந்துபோகும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. குறைந்தது நான்கு இனங்கள் அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது.

பொதுவாக அவுஸ்திரேலியாவில் இறந்த தவளைகளை காண்பது அரிது என கூறப்படும் நிலையில், சமீப மாதங்களாக அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் இறந்த தவளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவது மர்மமாகவும் கவலை அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உயிர் கொல்லும் பூஞ்சைகளால் தவளைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது.

ஆனால் திடீரென்று சமீப மாதங்களாக மட்டும் தவளைகள் இறக்க பூஞ்சைகள் காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நிபுணர்கள் தரப்பு தீவிர ஆய்வில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!