தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களே பஸ்ஸில் பயணிக்கலாம்!

முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களை மாத்திரம் பஸ்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

முழுமையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு அடையாள அட்டை ஒன்றை விரைவில் வழங்குவதனூடாக இதனை செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் பணத்தை செலுத்தி விரைவாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சுகாதாரத் தரப்பினரால் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டால் நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்களை மீள ஆரம்பிக்க வேண்டுமெனவும், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் இதனூடாகப் பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!