தொற்றாளர்கள் மூன்று இலட்சத்தை கடந்துள்ளமை ஆபத்தான நிலைமை! சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருப்பது சிறந்த அறிகுறியல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் குறுகிய காலத்துக்குள் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. இது சிறந்த அறிகுறியல்ல.

ஆபத்தான நிலைமையை இது எடுத்துக்காட்டுகின்றது. எனவே, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்தும் பேணாவிடின் மீண்டும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்” – என்றார்.

நாட்டில் நேற்றிரவு வரையில் 3 இலட்சத்து 4 ஆயிரத்து 161 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 2 இலட்சத்து 73 ஆயிரத்து 496 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 324 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!