ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

(FILES) This file illustration picture taken in Paris on November 23, 2020 shows a syringe and a bottle reading “Covid-19 Vaccine” next to AstraZeneca company and University of Oxford logos. – The Covid-19 vaccine developed by the British drugs group AstraZeneca and the University of Oxford has achieved a “winning formula” for efficacy, the company’s chief executive said on Sunday, December 27. (Photo by JOEL SAGET / AFP)
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்

அஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி முதற்கட்டமாக செலுத்தப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக குறித்த தடுப்பூசிகள் முன்னிலை அடிப்படையில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேல் மாகாணத்தில் சுமார் 5 லட்சத்து 26 ஆயிரம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதுடன் எஞ்சிய தொகை கேகாலை மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி மற்றுமொரு தொகை அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகள் நாட்டை வற்தடையவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!