அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த QR 668 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 2.15 அளவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு
கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

சுமார் 619 கிலோகிராம் நிறையுடைய தடுப்பூசிகள் 18 பொதிகளில் பாதுகாப்பான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதேவேளை முன்னதாக ஜூலை 26 ஆம் திகதி 90 ஆயிரம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் 19 ஆம் திகதி 60 ஆயிரம் தடுப்பூசிகளும் அத்துடன் 12 ஆம் திகதி 26 ஆயிரம் தடுப்பூசிகளும் மேலும் முதற்தடவையாக 5 ஆம் திகதி 26 ஆயிரம் தடுப்பூசிகளும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!