சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தற்போது முடியாது – ஜனாதிபதி

ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தற்போதைக்கு முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டியதனை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையின் கீழ் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களது மட்டுமன்றி ஏனைய அரச சேவையாளர்களின் சம்பள முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது சம்பள முரண்பாடுகளை களைவது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் நிலைமைகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் சம்பளங்களை உரிய நேரத்திற்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் இந்த தருணத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!