துமிந்த சில்வா விடுதலைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!

முன்னாள் உறுப்பினர் நாடாளுமன்ற துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின், சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து, இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் ஒருவர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மூலம், சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்காக பிரிவு 12 (1) ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட, தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று மனுதாரரான சட்டத்தரணி-கஸாலி ஹுசைன் கோரியுள்ளார்.

தமது மனுவின் இறுதித் தீர்ப்பு வரும் வரை துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவையும் மனுதாரர், தமது மனுவின் ஊடாக கோரியுள்ளார்.

அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்படும் எந்த மன்னிப்பும் அரசியலமைப்பின் பிரிவு 34 (1) இல் கூறப்பட்டுள்ளபடி, அத்தகைய மன்னிப்பை வழங்குவதற்கான அவசியத்தை கவனமாக பகுப்பாய்வு செய்த பின்னரே செய்யப்பட வேண்டும்.

துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு முன், பிரிவு 34 (1) ன் படி, நீதித்துறை நீதிபதிகளிடமிருந்து அறிக்கை வரவழைக்கப்பட வேண்டும். அத்துடன் , நீதி அமைச்சரும் ஜனாதிபதியிடம் பரிந்துரையை சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும் இது தொடர்பில், பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம், ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்ட போதும், தமது அறிவுக்கு எட்டிய வரை இதுவரை ஜனாதிபதி விளக்கம் அளிக்கவில்லை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட 4 பேரை 2011, அக்டோபர் 8, அன்று கொலை செய்ததற்காக கொழும்பு மேல் நீதிமன்றம், 2011, செப்டம்பர் 8 அன்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது.

2018, அக்டோபர் 11, அன்று, இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட்டவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்தமையை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் துமிந்த சில்வாவை மன்னிக்கும் ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!