முடக்குவது குறித்து நாளை முடிவு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக வார இறுதி நாட்களில் நாட்டை முடக்குவது அல்லது மேலும் சிறிது நாட்களுக்கு தொடர்ந்து முடக்குவது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் கூட்டத்தின்போது தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமடைந்திருப்பதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

டெல்டா தொற்றினை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிட்டபோது அவர் கூறியுள்ளார்.

இதுவரை கிடைத்த மாறுபட்ட கொரோனா தொற்றின் மாதிரிகள் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை இறுதியறிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!