கொழும்பு மாவட்டத்தில் 75 வீதமானவர்கள் டெல்டா வைரஸினால் பாதிப்பு

கொழும்பு மாவட்டத்தில் 75 வீதமானவர்கள் டெல்டா பரவலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்தவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் டெல்டா மாறுபாடு வேகமாக பரவலடைந்துள்ளதாகவும் சுட் டிக்காட்டியுள்ளனர்

இந்த நிலையில் ஜுலை மாதத்தில் மாத்திரம் 13 வீதமானவர்கள் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டதாகஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைககழகத்தின் உயிரியல்பீட பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 674 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 669 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 5 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 21 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 86 ஆயிரத்து 365 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 உயிரிழப்புகள் நேற்று பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது

.இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 30 ஆயிரத்து 337 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!