கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபரின் தந்தை விடுதலை

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபரின் தந்தை, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று இடம்பெற்ற நிலையில் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்கொலைதாரியின் தந்தை சுமார் ஒன்றரை வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்

இதன்படி குறித்த நபர் தொடர்பில் தொடர்ந்தும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது எனவும், இதனால் அவரை விடுதலை செய்யுமாறும் சட்டமா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, குறித்த சந்தேக நபரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருந்தது.

எனினும், சட்டமா அதிபர் இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!