பொதுமக்கள் அவசியமின்றி வெயிலில் செல்ல வேண்டாம்: – தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்கள் அவசியமின்றி வெயிலில் செல்ல வேண்டாம். பகல், 12:00 மணி முதல், 3:00 வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். சர்க்கரை அதிகமுள்ள திரவங்களை தவிர்க்கவும், மிக குளிர்ந்த பானங்களை அருந்த வேண்டாம்.குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை, வாகனம் நிறுத்தும் இடங்களில், வாகனங்களில் விட்டு செல்ல வேண்டாம்.தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு 43 டிகிரி வரை மட்டும் வெப்பநிலை உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில், 110 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச வெப்பம் பதிவானது. இந்த கோடையில், சென்னையில், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய நிலையில், நேற்று முன்தினம், 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது, இது, நேற்றும் உயர்ந்தது. மாநிலத்தின் இரண்டாவது அதிக பட்ச வெப்பநிலையாக மீனம்பாக்கத்தில் 42.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது, வழக்கத்தை விட 6 டிகிரி செல்சியஸ் அதிகம்.

சென்னையில், 1908ல் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. அதுவே, இதுவரை பதிவான அதிக பட்ச வெப்பநிலை. அதை நெருங்கும் வகையில், சென்னையில், 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.2016 ஏப்ரல் 23ல், 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. பத்து ஆண்டுகளில், இதுவே அதிக பட்சம். மாநிலத்தில் அதிக பட்சமாக, நேற்று வேலுாரில், 43.5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது, 110 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.

Tags: