“முக்ககவசம் கட்டாயமில்லை” – பிரான்ஸ் அதிரடி!

பிரான்ஸ் சுகாதார அமைச்சர் கட்டாயச் சுகாதார அனுமதி இடங்களில் முக்ககவசம் கட்டாயமில்லை என்று கூறியுள்ளார். பிரான்சில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, உணவகங்கள், அருந்தகங்கள், திரையரங்குகள், பொழுது போக்கு இடங்கள் போன்றவைக்குள் செல்ல வேண்டும் என்றால் இன்று முதல் pass sanitaire என்கிற சுகாதார அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்படுகிறது.

இதனால், சுகாதார அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் இந்த இடங்களுக்கு செல்வதால், அவர்கள் அங்கு முக்கக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் கூறியுள்ளார்.

மேலும், சுகாதார அனுமதிப்பத்திரத்துடன் TGV தொடருந்துகளில் , அல்லது விமானங்களில் பயணிப்பவர்கள் தொடர்ந்தும் கட்டாயம் முக்கக்கவசம் அணியவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!