ஆறு மனைவிகளை திருமணம் செய்து 54 குழந்தைகள் பெற்றேடுத்த கில்லாடி தாத்தா!

பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் 6 மனைவிகளை திருமணம் செய்து, அவர்கள் 54 குழந்தைகள் பெற்றேடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் மேற்குபகுதியின் Quetta பகுதியைச் சேர்ந்தவர் Abdul Majeed Mengal(70). இவருடைய தந்தைக்கு பத்து குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் Abdul Majeed Mengal தன் வாழ்நாளில் இது வரை 6 மனைவிகளை திருமணம் செய்துள்ளார். இதனால் அவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது.அதில் 12 குழந்தைகள் இறந்துவிட்டன. மீதம் 42 குழந்தைகள் உள்ளன. அவர்களில் 22 ஆண் குழந்தைகள் மற்றும் 20 பெண் குழந்தைகள் ஆவர்.

Abdul Majeed Mengal தனது முதல் மனைவியை 18 வயதில் திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் 5 பெண்களை திருமணம் செய்துள்ளார்.இதில் இரண்டு மனைவிகள் இறந்துவிட்டனர். 12 குழந்தைகள் இறந்ததற்கு காரணம் சரிவர பால் கொடுக்காதது தான் என்றும், அதற்கான பணவசதி Abdul Majeed Mengal-இடம் இல்லை என்று கூறப்படுகிறது.Abdul Majeed Mengal டிரைவராக பணியாற்றி வருகிறார். இருந்த போதிலும் இவரது வருமானம் குடும்பத்திற்கு போதாத காரணத்தினால், அவரது மகன்களும் வேலைக்கு சென்று உதவி செய்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் 7 அறைகள் கொண்ட வீட்டில் தங்கிவருகின்றனர். குழந்தைகள் தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.இது குறித்து Abdul Majeed Mengal கூறுகையில், 42 குழந்தைகள் உள்ளதால், தனது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

தன்னுடைய இந்த ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் தன்னுடைய உணவில் தினந்தோறும் ரொட்டி இருக்கும் என்று கூறியுள்ளார்.குழந்தைகளில் பத்து குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பமுடியாமல், அவர் கஷ்டப்பட்டு வருகிறார். அந்த குழந்தைகள் பள்ளியில் அனுமதித்தால், பள்ளிக்கட்டணம் கட்ட வேண்டும் என்றும், அதற்கான பண வசதி தன்னிடம் தற்போது இல்லை என்று கூறியுள்ளார்.தனக்கு எல்லா குழந்தைகளும் படிக்க வேண்டும் என்று ஆசை தான் எனவும், தன்னுடைய பொருளாதார நிலை சரியில்லாததால், அது என்னால் முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Tags: ,