கோவிட் பரவலை தடுப்பதற்கான கடைசி முயற்சி மட்டுமே ஊரடங்கு உத்தரவு – அமைச்சர் இன்று அறிவிப்பு

கோவிட் பரவலை தடுப்பதற்கான கடைசி முயற்சியாக மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன நாட்டில், வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கிறது.

நாட்டை முழுமையாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை.

எனினும், தேவைப்படும் போது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!